செய்திகள்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புத்தாண்டுச் சபதம்

இறுதிக்கட்டத்தை மாற்றுவதற்கான பயணத்தை உங்களால் தொடங்க முடியும்...

DIN

தனது புத்தாண்டுச் சபதத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அதிகக் கவனம் பெற்றார். தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். பிறகு கரோனா பாதிப்பிலிருந்து ரகுல்ப்ரீத் சிங் சமீபத்தில் குணமடைந்தாா். 

இந்நிலையில் தனது புத்தாண்டுச் சபதத்தை இன்ஸ்டமிராமில் வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அதில் அவர் கூறியதாவது:

மீண்டும் திரும்பிச் சென்று உங்களால் தொடக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் இறுதிக்கட்டத்தை மாற்றுவதற்கான பயணத்தை உங்களால் தொடங்க முடியும். புத்தாண்டுச் சபதம் இது என்று கூறியுள்ளார். 

மே டே என்கிற படத்தை அஜய் தேவ்கன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் போன்றோர் நடிக்கிறார்கள். 2020, ஏப்ரல் 29 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் பங்கேற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றைக் காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT