செய்திகள்

இணை இயக்குநரைத் திருமணம் செய்தார் நடிகை கயல் ஆனந்தி (படங்கள்)

பிரபல நடிகை கயல் ஆனந்தி, இணை இயக்குநர் சாக்ரடீஸைத் திருமணம் செய்துள்ளார்.

DIN

பிரபல நடிகை கயல் ஆனந்தி, இணை இயக்குநர் சாக்ரடீஸைத் திருமணம் செய்துள்ளார்.

2014-ல் பொறியாளன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ஆனந்த். அடுத்து அவர் நடித்த கயல் படத்தினால் கயல் ஆனந்தி என்கிற பெயரைப் பெற்றார். ஆரம்பத்தில் தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த ஆனந்தி, 2014-க்குப் பிறகு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

இந்நிலையில் இயக்குநர் நவீனின் உறவினரும் இணை இயக்குநருமான சாக்ரடீஸைத் திடீர் திருமணம் செய்துள்ளார் 27 வயது ஆனந்தி. தெலங்கானா மாநிலம் வாராங்கலில் ஆனந்தி - சாக்ரடீஸ் திருமணம் நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குநராக சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். திருமணப் புகைப்படங்களைத் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT