செய்திகள்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்பு அம்சங்கள்: நடிகர் அரவிந்த் சாமி கோரிக்கை

பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதால் விளையாட்டின் தன்மை ஒருபோதும் பாதிக்கப்படாது...

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்திலும் பாலமேட்டிலும் அலங்காநல்லூரிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டன. 

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்துவதால் விளையாட்டின் தன்மை ஒருபோதும் பாதிக்கப்படாது. இதனால் உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கும் காயங்கள் குறைந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. கிரிக்கெட், குத்துச்சண்டை, ஹாக்கி, ஆட்டோ ரேசிங், மார்ஷியல் கலை, சைக்கிள்... போட்டியாளர்களுக்கு மதிப்பளித்து, விளையாட்டும் புகழை அடைந்துள்ளன. எனவே ஜல்லிக்கட்டுக்கும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தலாமா என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

களமிறங்கிய 5 போட்டிகளிலும் அரைசதம்! கலக்கும் தென்னாப்பிரிக்க வீரர்!

SCROLL FOR NEXT