செய்திகள்

ராதே படம் திரையரங்கில் வெளியாகும்: சல்மான் கான் அறிவிப்பு

ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

DIN

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.

சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 

ராதே படம் கடந்த மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் ராதே படமும் ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் ராதே படம் திட்டமிட்டபடி இந்த வருடம் மே 12 அன்று வெளியாகும் என சல்மான் கான் அறிவித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் அவர் கூறியதாவது:

இக்கடினமான காலக்கட்டத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை நான் அறிவேன். ராதே படத்தை மே 12 அன்று திரையரங்கில் வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். பதிலுக்கு ராதே படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து நன்குக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - ஆஸி. போட்டி டிக்கெட் விற்பனை அமோகம்! 1,75,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன!

நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி!

ராமதாஸுடன் இபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை?

பிரேமலதா தாயார் காலமானார்!

எந்த வருத்தமும் இல்லை! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞர் கருத்து!

SCROLL FOR NEXT