FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

Updated On : 5 மார்ச் 2026, 8:07 pm IST
சிபிஎஸ்இ - பிரதிப் படம்
பகிர்:

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் (பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்) நிலவும் பதற்றம் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிவரையில் திட்டமிடப்பட் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

12 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை மறுஆய்வு செய்து, தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுகளை வழங்கப்படும்.

மாணவர்கள், தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து - ANI
summary

CBSE exams cancelled due to tensions in the Middle East

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments