அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்: படப்பிடிப்பு தொடக்கம்
மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
கடந்த வருட பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படமான அய்யப்பனும் கோஷியும் ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் சச்சி இயக்கிய இப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.
ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தைச் சேர்ந்த கதிரேசன், தமிழ் ரீமேக்கின் உரிமையைப் பெற்றுள்ளார். அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கி, அதிக கவனம் பெற்ற இயக்குநர் சச்சி சமீபத்தில் காலமானார். அவருக்கு வயது 48.
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. பவன் கல்யாண், ராணா டகுபதி நடிக்கும் இப்படத்துக்கு பில்லா ரங்கா எனத் தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், சாய் பல்லவி ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - எஸ்.எஸ். தமன்.
சாகர் சந்திரா இயக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. அடுத்த 25 நாள்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறும் எனத் தெரிகிறது.
அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.