முகப்பு
செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் சலார்: கதாநாயகியாக ஷ்ருதி ஹாசன் தேர்வு!

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் பிரபாஸ். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்துள்ளார் பிரபல நடிகர் பிரபாஸ்.  பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

பிரபாஸ் - பிரஷாந்த் நீல் இணையும் படத்துக்கு சலார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹாம்பேல் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சலார் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சலார் படத்தின் கதாநாயகியாக ஷ்ருதி ஹாசன் நடிக்கிறார். இன்று அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் சலார் படத்தில் ஷ்ருதி ஹாசன் நடிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.