முகப்பு
செய்திகள்

மோகன் லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் புதிய படம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் கதாநாயகனாக நடித்த த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய இரு படங்களும்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன் லால். இருவர் கூட்டணியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் கதாநாயகனாக நடித்த த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றன. இதையடுத்தும் இருவரும் இணைந்து ராம் என்கிற படத்தில் இணைந்தார்கள். இதன் படப்பிடிப்பு இன்னும் நிறைவுபெறவில்லை.

இந்நிலையில் இருவர் கூட்டணில் உருவாகவுள்ள 12த் மேன் (12th Man) என்கிற படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.