செய்திகள்

நடிகர் திலீப் குமார் உடல்நிலையில் முன்னேற்றம்

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 

DIN

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.

கடந்த ஜூன் 6-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் வீடு திரும்பினாா். அவருக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் ஜூன் 29 அன்று அனுமதிக்கப்பட்டாா். அவரின் வயதைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் திலீப் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய மனைவி சாய்ரா பானு கூறியுள்ளதாவது:

கடவுளின் அருளால் திலீப் குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் அவர் மருத்துவமனையில் தான் உள்ளார். உங்களுடைய பிரார்த்தனைகள் எங்களுக்குத் தேவை. இதனால் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்யூஸ்ட் வெற்றி விழா - புகைப்படங்கள்

புரோ கபடி லீக் சீசன் 12 விரைவில்! - ஜியோஸ்டார்

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

SCROLL FOR NEXT