செய்திகள்

ஆமிர் கான் படம்: பாலிவுட்டில் அறிமுகமாகும் நாக சைதன்யா

DIN

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது. 

இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்குகிறார். 

ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் இடம்பெற்ற பெஞ்சமின் புஃபோர்ட் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அப்படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் இப்படத்தின் பிரபல தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யா நடிக்கிறார். இதன்மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நாக சைதன்யா, ஆமிர் கானுடன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT