செய்திகள்

மாநாடு படப்பிடிப்பு நிறைவு: படக்குழுவினருக்குப் பரிசு வழங்கிய சிம்பு (படங்கள்)

படப்பிடிப்பில் பங்கேற்ற 168 பேருக்கும் கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் சிம்பு.

DIN

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்தார் சிம்பு. அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். சிம்புவின் பிறந்த நாளன்று மாநாடு படத்தின் டீசர் வெளியானது. 

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை 10 அன்று தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் அதே தேதியில் நிறைவுபெற்றதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் பங்கேற்ற 168 பேருக்கும் கைக்கடிகாரத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் சிம்பு. பலவித தடங்கல்களுக்கு மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால் தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பரிசு வழங்கிய சிம்புவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு நன்றி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT