முகப்பு
செய்திகள்

காதல் கோட்டை 25 ஆண்டுகள்: கொண்டாட்டத்தில் பங்கேற்காத ஹீரோவும் ஹீராவும் (படங்கள்)

இயக்குநர் அகத்தியன், நடிகை தேவயானி, இசையமைப்பாளர் தேவா போன்றோர் கலந்துகொண்ட...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
பகிர்:

1996 ஜூலை 12  அன்று வெளியான காதல் கோட்டை படம் மகத்தான வெற்றியை அடைந்தது. அகத்தியன் இயக்கிய இந்தப் படத்தில் அஜித், தேவயானி, ஹீரா நடித்தார்கள். இசை- தேவா, ஒளிப்பதிவு - தங்கர் பச்சான். 

சிறந்த இயக்கத்துக்காகவும் சிறந்த திரைக்கதைக்காகவும் தேசிய விருதுகளைப் பெற்றார் அகத்தியன். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. 

படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதுபற்றி ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் கூறியதாவது:

காதல் கோட்டை திரைப்படம் எனக்கு எட்டாவது படம். இதன் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்வு நேற்று அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் இனிதே நடந்தேறியது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்றார். 

இயக்குநர் அகத்தியன், நடிகை தேவயானி, இசையமைப்பாளர் தேவா போன்றோர் கலந்துகொண்ட கொண்டாட்ட நிகழ்வின் புகைப்படங்களையும் தங்கர் பச்சான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்தக் கொண்டாட்டத்தில் கதாநாயகன் அஜித்தும் 2-வது கதாநாயகியாக நடித்த ஹீராவும் பங்கேற்கவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →