முகப்பு
செய்திகள்

சசிகுமாரின் புதிய படம்: பூஜையுடன் தொடக்கம் (படங்கள்)

இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - கணேஷ் சந்திரா.

Updated On : 13 ஜூலை, 2021 at 5:03 PM
பகிர்:

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கத்தில் நடிக்க சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - கணேஷ் சந்திரா. நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தானை முடிச்சு ரீமேக், பகைவனுக்கு அருள்வாய், ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், கொம்பு வைச்ச சிங்கம் போன்ற படங்களில் சசிகுமார் நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக எம்ஜிஆர் மகன் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.