‘அதிகாரிகளை கேள்வி கேட்பேன்’: வெளியானது டாணாக்காரன் திரைப்பட டீசர்
காவலர் பயிற்சி பெறுபவராக விக்ரம்பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
காவலர் பயிற்சி பெறுபவராக விக்ரம்பிரபு நடித்துள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் டாணாக்காரன். இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநராக பணியாற்றிய தமிழ் புதுமுக இயக்குநராக அறிமுகமாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகர்கள் லால். அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கமும், இசையமைப்பாளராக ஜிப்ரானும், படத்தொகுப்பாளராக ஃபிலோமின் ராஜ் ஆகியோரும் பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படம் பயற்சி காவலர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சியாளர்களாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையேயான சிக்கலை கதைக் களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியானது. டாணாக்காரன் திரைப்படத்தின் டீசருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.