செய்திகள்

காதல் கதையை இயக்கும் பா. இரஞ்சித்

சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக காதல் படமொன்றை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித்.

DIN

சார்பட்டா பரம்பரை படத்துக்கு அடுத்ததாக காதல் கதையை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது. ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரைக்கு அடுத்ததாக காதல் படமொன்றை இயக்கவுள்ளார் பா. இரஞ்சித். காலாவுக்கு அடுத்ததாக பிர்சா முண்டா என்கிற படத்தை இயக்க இருந்தார். ஆனால் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கிய பா. இரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது என்கிற காதல் கதையைக் கொண்ட ஒரு படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT