செய்திகள்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

ஆபாசப் படங்களைத் தயாரித்து செயலிகளில் வெளியிட்டதற்காக

DIN

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009-ல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு 2012-ல் மகனும் 2020-ல் மகளும் பிறந்தார்கள். 

இந்நிலையில் ராஜ் குந்த்ராவை மும்பைக் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்கை மும்பை குற்றப் பிரிவு காவல்துறை பதிவு செய்தது. ஆபாசப் படங்களைத் தயாரித்து செயலிகளில் வெளியிட்டதில் முக்கியக் குற்றவாளியாக உள்ள ராஜ் குந்த்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT