செய்திகள்

'அரண்மனை 3' புகைப்படங்கள்: மறைந்த நடிகர் விவேக் குறித்து ரசிகர்கள் நெகிழ்ச்சி

DIN

'அரண்மனை 3' படத்தில் இருந்து வெளியான மறைந்த நடிகர் விவேக்கின் புகைப்படங்கள், ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'அரண்மனை 3'. இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, மனோபாலா
உள்ளிட்டோருடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்துக்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. 'இந்தியன் 2' படத்தில் விவேக்கின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்படாததால், அவரது மறைவு படக்குழுவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக வேறு நடிகரை வைத்து படமாக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அரண்மனை 3 நடிகர் விவேக்கின் கடைசி படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் 'அரண்மனை 3' படத்தில் இருந்து வெளியான நடிகர் விவேக்கின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் மனோபாலா தனது சுட்டுரையில் யோகி பாபு, விவேக்குடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்தப் புகைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராஷி கண்ணாவும் பாடல் பதிவில் ஆர்யாவுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT