செய்திகள்

யோகி பாபு மகனின் பெயர் என்ன தெரியுமா ? - புகைப்படங்கள் பகிர்ந்த பிரபல இயக்குநர்

நடிகர் யோகி பாபுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் விருமாண்டி தனது முகநூல் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

DIN

நடிகர் யோகி பாபுவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் விருமாண்டி தனது முகநூல் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 

நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் வெளியான 'கர்ணன்' மற்றும் 'மண்டேலா' படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்த இரண்டு படங்களிலும் வழக்கமான நகைச்சுவை வேடமாக இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருப்பார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா இணையத் தொடரில் பிரியதர்ஷன் இயக்கியுள்ள படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். . 

யோகி பாபுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 'க/பெ ரணசிங்கம்' பட இயக்குநர் விருமாண்டி இன்று (வியாழக்கிழமை) தனது முகநூல் பக்கத்தில் யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில், யோகிபாபுவின் மகனுக்கு விசாகன் எனப் பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து யோகி பாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படங்களான 'வலிமை', 'டாக்டர்', 'அரண்மனை 3', 'அயலான்' உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT