செய்திகள்

ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் கவினின் 'லிஃப்ட்'? - தயாரிப்பாளர் விளக்கம்

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் ஹீரோவாக நடித்திருந்த 'லிஃப்ட்' படம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்சன் அறிவித்துள்ளது.  

DIN

பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் ஹீரோவாக நடித்திருந்த 'லிஃப்ட்' படம் நேரடியாக ஓடிடியில் தான் வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்சன் அறிவித்துள்ளது. 

கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். தொடர்ந்து 'நட்புனா என்னனு தெரியுமா' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மீது காதல் வயப்பட்டதன் காரணமாக மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும், அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். 

அதனைத் தொடர்ந்து 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'பிகில்' அம்ரிதா  நடித்திருந்தார். இந்தப் படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் பாடிய 'என்ன மயிலு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியிட்டுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில், படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் பரவியது. 

இதுகுறித்து விளக்கமளித்த இந்தப் படத்தை வெளியிடும் லிப்ரா புரொடக்சன் நிறுவனம், '' வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும்'' எனத் தெரிவித்துள்ளது. இந்த செய்தி கவினின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவின் நடிகராக மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த 'டாக்டர்' படத்தில் இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், இயக்குநர் நெல்சன் - தளபதி விஜய் இணையும் 'பீஸ்ட்' படத்திலும் உதவி இயக்குநராக பணிபுரிகிறார்.

படப்பிடிப்பின்போது விஜய் தன்னிடம்,  அஸ்க்கு மாரோ பாடல் நன்றாக இருப்பதாகக் கூறினார் என ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கவின் பகிர்ந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT