செய்திகள்

பிறந்த நாள் பரிசாக வெளியாகப்போகும் தனுஷ் பட முதல் பார்வை போஸ்டர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்ணன், ஜெகமே தந்திரம் படங்களுக்கு பிறகு தனுஷ், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கும் இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு நடிகர் மகேந்திரன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி, 'சூரரைப் போற்று' பட புகழ் கேகே, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்க, விவேக் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளார். தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு எப்படி இருக்கும், தனுஷ் என்ன தோற்றத்தில் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

நடிகர் தனுஷ் ஹிந்தியில் 'அட்ராங்கி ரே', ஆங்கிலத்தில் 'தி கிரே மேன்', இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து 'நானே வருவேன்' உள்ள படங்கள் தனுஷ் அடுத்தடுத்து வெளியாவிருக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுஷ் துணை மருத்துவப் பட்டயப்படிப்புகள்: செப். 23 வரை விண்ணப்பிக்கலாம்!

என்னை மார்போடு சேர்த்தவளே... நிகிதா தத்தா!

மழையூரின் சாரலிலே... சனம் ஷெட்டி!

என்னை அடியோடு சாய்த்தவளே... கீர்த்தி சனோன்!

அன்பூரில் பூத்தவனே... அமேயா மேத்யூ!

SCROLL FOR NEXT