செய்திகள்

வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா

தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

DIN

தன்னைப் பரவிய வதந்திகளுக்கு விடியோ மூலம் நடிகை ஷகீலா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

நடிகை ஷகீலா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகளால் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தார். சக போட்டியாளர்களும், கோமாளிகளும் அவரை அம்மா என அழைத்து பாசத்தைப் பொழிந்தனர். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், நான் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. அதனை நான் கேட்டு அதிர்ச்சியானேன். இதோ நான் நலமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நிறைய பேர் அழைத்து நலம் விசாரித்தார்கள். உங்கள் அன்பு என்னை நெகிழ்ச்சியடையச் செய்தது. என்னைப் பற்றி தவறான தகவல் அளித்த நபருக்கு நன்றி. அதனால் தான் நீங்கள் என்னை கவனித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT