செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சிம்பு தேவனின் கசட தபற

வெங்கட் பிரபு தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ஷாந்தனு பாக்யராஜ்...

DIN


2006-ல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிம்பு தேவன். இதன்பிறகு - அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

வெங்கட் பிரபு தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷன், ஷாந்தனு பாக்யராஜ், வெங்கட் பிரபு, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, பிரேம்ஜி அமரன் போன்றோர் நடித்த கசட தபற என்கிற படத்தை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சிஎஸ், பிரேம்ஜி, சீன் ரோல்டன் என ஆறு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்கள். அதேபோல ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்களும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள். ஆறு கதைகள் கொண்ட படமாக கசடதபற உருவாகியுள்ளது.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் உள்ளதால் கசட தபற படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் நாளைமுதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு! வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு!

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிகாரில் பாஜகவுக்கு எதிராக போராட்டம் வெடித்ததா? உண்மை என்ன?

புத்தகப்பையை சுமந்துகொண்டு 100 முறை தோப்புக்கரணம்: பள்ளி மாணவி பலி

செளதி அரேபியாவில் பேருந்து விபத்து: 42 இந்தியர்கள் பலி!

SCROLL FOR NEXT