துப்பறிவாளன் 2 பட அறிவிப்பின்போது விஷால் வெளியிட்ட புகைப்படம் 
செய்திகள்

துப்பறிவாளன் 2 படத்தை இளையராஜாவிடம் காண்பிக்க விருப்பம்: விஷால்

ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2 படத்தை உங்களுக்கு...

DIN

துப்பறிவாளன் 2 படத்தை இளையராஜாவிடம் காண்பிக்க விருப்பப்படுவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார். 

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்தார் விஷால். இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார். 

இந்நிலையில் இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விஷால் கூறியதாவது:

மேஸ்ட்ரோ இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை அளிக்க வேண்டும். பலநாள் கனவாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2 படத்தை உங்களுக்குக் காண்பிக்கக் காத்திருக்கிறேன். இன்னும் அற்புதமான பாடல்களை நீங்கள் எங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்பகனூரில் களை கட்டிய ஆட்டுச் சந்தை!

சைபர் பாதுகாப்பு குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்வி-பதில்கள்!

டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

பருவமழை: சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஆய்வு!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று பவுன் எவ்வளவு தெரியுமா..?

SCROLL FOR NEXT