முகப்பு
செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஏ.ஆர். ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
படம்: இன்ஸ்டாகிராம் | ஏ.ஆர். ரஹ்மான்
பகிர்:


பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததையடுத்து, விளையாட்டுப் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகன் ஏ.ஆர். அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், " கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டேன், நீங்கள்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். அமீனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →