செய்திகள்

தி ஃபேமிலி மேன் 2 சண்டைக் காட்சி: நன்றி தெரிவித்து நடிகை சமந்தா வெளியிட்ட விடியோக்கள்

என் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் வலி ஏற்பட்டபோதும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார்.

DIN


தி ஃபேமிலி மேன் 2 இணையத்தொடரில் சண்டைக் காட்சிகளில் நடித்தது தொடர்பாக இரு விடியோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா. 

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2, அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த வெள்ளியன்று வெளியானது. 

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் 2 இணையத்தொடர்களில் சண்டைக் காட்சியில் நடித்தது தொடர்பாக இன்ஸ்டகிராம் தளத்தில் இரு விடியோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா. அவர் கூறியதாவது:

சண்டைக்காட்சிகள் முழுவதிலும் நானே ஈடுபட உதவிய சண்டைப்பயிற்சி கலைஞர் யானிக் பென்னுக்கு நன்றி. என் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் வலி ஏற்பட்டபோதும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்தார். உயரமான இடங்களைக் கண்டால் நான் அச்சப்படுவேன். ஆனால் நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் அந்தக் கட்டடத்திலிருந்து குதித்தேன். மிகவும் நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

SCROLL FOR NEXT