முகப்பு
செய்திகள்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு சூர்யா & கார்த்தி நிதியுதவி

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது ரசிகர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளார்கள்.

கரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தங்களது ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தலா ரூ. 5,000 ஆயிரம் அளித்துள்ளார்கள் சூர்யாவும் கார்த்தியும். தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 5,000 அளித்துள்ளார் நடிகர் சூர்யா. அதேபோல சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியும் தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 200 உறுப்பினர்களுக்குத் தலா ரூ. 5,000 அளித்துள்ளார். இந்தத் தொகையை ரசிகர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளார்கள். 

இதற்கு முன்பு சூர்யா குடும்பத்தினர், கரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி அளித்திருந்தார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →