செய்திகள்

வொண்டர் வுமன் 1984 கால் கேடட் பாணியில் உடையணிந்து விடியோ வெளியிட்ட வாணி போஜன்

என்னுடைய முயற்சிக்கு வொண்டர் வுமன் 1984 படத்தை விடவும் வேறு எது ஊக்கமாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார். 

DIN

2017-ல் வெளியான வொண்டர் வுமன் படத்தின் அடுத்த பாகமாக வொண்டர் வுமன் 1984 படம் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவானது. பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய இப்படத்தில் டயானா பிரின்ஸ் என்கிற வொண்டர் வுமனாக நடித்தார் கால் காடட். கடந்த டிசம்பரில் அமெரிக்கா, இந்தியா உள்பட சில நாடுகளில் திரையரங்குகளிலும் எச்பிஓ மேக்ஸிலும் வொண்டர் வுமன் 1984 படம் வெளியானது. பிறகு, அமேசான் பிரைம் ஓடிடியில் கடந்த மே 15 அன்று வெளியானது.

கடந்த வருடம் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்துக் கவனம் பெற்றார் வாணி போஜன். இதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வொண்டர் வுமன் 1984 படத்தில் கால் காடட் உடையணிந்தது போன்று தானும் விதவிதமாக உடையணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டகிராம் தளத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார் வாணி போஜன். என்னுடைய முயற்சிக்கு வொண்டர் வுமன் 1984 படத்தை விடவும் வேறு எது ஊக்கமாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT