செய்திகள்

190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம்...

DIN

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் 190 நாடுகளில் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் தமிழில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ரசிகர்கள் தமிழ் உள்பட 17 மொழிகளில் கண்டுகளிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT