முகப்பு
செய்திகள்

கரோனா நிவாரண நிதி: ரூ. 25 லட்சம் வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இத்தொகையை அவர் வழங்கியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.