செய்திகள்

ஜூன் 19ல் அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்!

DIN

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர் அவ்வப்போது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருகிறார். 

இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு செல்ல முடியாத நிலையில் தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார். 

பாதுகாப்பு கருதி தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி(சனிக்கிழமை) அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினர் ஒரு சிலரும் பயணிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT