செய்திகள்

பிரேமம் இயக்குநருக்குப் பதில் அளித்த கமல் ஹாசன்!

DIN

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா, அனுபமா நடிப்பில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் - பிரேமம்.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், ஃபேஸ்புக்கில் கமல் ஹாசனுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். மைக்கேல் மதன காம ராஜன் படத்தை எப்படி எடுத்தீர்கள் சார்? தசாவதாரம் படம் உருவாக்கத்தில் பி.எச்.டி. பட்டம் அளிக்கக்கூடியது போன்றது. மைக்கேல் மதன் காமராஜன், பட உருவாக்கத்தில் பட்டப் படிப்பு போன்றது என்றார்.

இதற்கு கமல் ஹாசன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

விரைவில் உங்கள் கேள்விக்கு விளக்கம் அளிக்கிறேன். நீங்கள் அதிலிருந்து எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் என்று தெரியவில்லை. எனக்கு அது மாஸ்டர் கிளாஸ். அதைப் பற்றி பல வருடங்கள் கழித்துப் பேசினாலும் எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும் என்றார்.

கமல் ஹாசனின் பதிலால் மகிழ்ச்சியடைந்த அல்போன்ஸ் புத்ரன் கூறியதாவது:

மிக்க நன்றி சார். உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது அற்புதமாக இருக்கும். எனக்கு மட்டுமல்ல, பல கோடி மக்களுக்கும் பட உருவாக்கம் பற்றி கற்றுக்கொள்ளும் மாணவர்கள் பலருக்கும். நன்றி சார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT