செய்திகள்

அமெரிக்காவில் ரஜினி: வெளியான புகைப்படம்

ரஜினி, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முகக்கவசம் அணியவில்லை.

DIN

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ரஜினியின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தாா். இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியையும் அவா் கோரி இருந்தாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய அரசு உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்கா சென்றார் ரஜினி. அவருடன் குடும்பத்தினரும் சென்றார்கள். 

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வா்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளார்கள். தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஆங்கிலப் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். 

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையின் வெளியே மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி சாலையைக் கடக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கரோனா அச்சுறுத்தல் குறைவாக உள்ளதால் ரஜினி, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் முகக்கவசம் அணியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT