செய்திகள்

பல்லாவரம் மலை: நடிகை சமந்தா உருக்கம்

இதனால் தான் என்னுடைய மலைக்குத் தனிப் பதிவு அவசியம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

DIN

பல்லாவரம் மலையின் விடியோவை வெளியிட்டு உருக்கமான பதிவொன்றை எழுதியுள்ளார் நடிகை சமந்தா.

பிரபல நடிகை சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா, தனது வீட்டுக்கு அருகே உள்ள மலையை எண்ணி உருக்கமாக பதிவொன்றை இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்த மலை, நான் வளரும்போது என் வீட்டு மாடியிருந்து தெரியும். எனக்குப் பிடித்த இடம். எந்த ஒரு மனிதரையும் விட என்னை இதற்கு நன்குத் தெரியும். தேர்வு நாள்களின் பரபரப்பான காலைத் தருணங்கள், எல்லாக் கடவுள்களுக்கும் நான் செய்த, நிறைவேற்றாத சத்தியங்கள், என் முதல் காதல், இதயம் உடைந்தது, என் நண்பரின் மரணம், கண்ணீர்கள், பிரியாவிடைகள்... இதனால் தான் என்னுடைய மலைக்குத் தனிப் பதிவு அவசியம் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT