செய்திகள்

பிரசாந்த் நடிக்கும் அந்தாதுன் ரீமேக்: இயக்குநர் மாற்றம்!

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

DIN

பிரசாந்த் நடிக்கும் அந்தாதுன் தமிழ் ரீமேக்கை நடிகர் தியாகராஜன் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவான அந்தாதுன் படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனினும் சீனாவில் இந்தப் படத்தின் வசூல் நம்பமுடியாத வகையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூ. 300 கோடியைத் தாண்டியது. இதன்மூலம் சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களில் 3-ம் இடத்தைப் பிடித்தது. டங்கல் (1,200 கோடி), சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ரூ. 700 கோடி) படங்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது அந்தாதுன். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம்  சிறந்த நடிகர் - (ஆயுஷ்மன் குரானா), சிறந்த திரைக்கதை (தழுவல்), சிறந்த ஹிந்திப் படம் என மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. 

அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார். பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தபு வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இசை - சந்தோஷ் நாராயணன்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பிரட்ரிக், அந்தாதுன் தமிழ் ரீமேக்கை இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

பிரட்ரிக்குக்குப் பதிலாக பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கவுள்ளார். இத்தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT