செய்திகள்

இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார் ஜனநாதன். உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

DIN

முன்னணி இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

2003-ல் இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.பி. ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவருடைய முதல் படமான இயற்கை, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. தற்போது விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் நடித்துள்ள லாபம் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று லாபம் படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் இருந்த ஜனநாதன் பிறகு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மீண்டும் படத்தொகுப்புப் பணிகளுக்குத் திரும்பாததால் அவருடைய உதவியாளர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தார்கள். அங்கு சுயநினைவின்றி இருந்துள்ளார் ஜனநாதன். உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். 

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

ஆபாச படம்: நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப் பதிவு!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

SCROLL FOR NEXT