செய்திகள்

தேசிய விருதுகள்: சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதி தேர்வு

தமிழ் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

தமிழ் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம்,  சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT