விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த வெங்கடேஷ் மாரடைப்பால் காலமானார்.
55 வயது வெங்கடேஷ், பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் தந்தையாக நடித்து வந்தார். ஈரமான ரோஜாவே, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களிலும் வெங்கடேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் மாரடைப்பால் அவர் காலமானார். வெங்கடேஷுக்கு பாமா என்கிற மனைவியும் தேவ் ஆனந்த் என்கிற மகனும் நிவேதா என்கிற மகளும் உள்ளார்கள்.
மைனா, பீட்சா, பேட்ட போன்ற 60 படங்களில் வெங்கடேஷ் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர்கள் பலரும் வெங்கடேஷின் மறைவுக்குச் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.