முகப்பு
செய்திகள்

விஜய் பட கதாநாயகி பூஜா ஹெக்டே: சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. 

பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →