செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 99 ஸாங்ஸ் பாடல்கள் வெளியீடு

ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்த 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

DIN

ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து தயாரித்த 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள 99 ஸாங்ஸ் படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் டிரெய்லர் வெளியானது.

இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் இப்படத்துக்குக் கதை எழுதி தயாரித்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். 99 ஸாங்ஸ் படத்தை ஹிந்தியில் தயாரித்தது ஏன் என்கிற கேள்விக்கு ரஹ்மான் பதில் அளித்ததாவது: நான் ஏன் ஹிந்தியில் இப்படத்தைத் தயாரிக்கக் கூடாது? நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். அதனால் தமிழில் சுலபமாக இப்படத்தை எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தப் படத்தின் கதை தென்னிந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதற்கும் உரியது என எண்ணினேன். நீங்கள் தமிழ்ப் படத்தை எடுத்து அதை ஹிந்தியில் டப் செய்தால், அது தென்னிந்தியப் படமாக இருக்கும். ஆனால் இங்கு இது அனைவருக்குமானது. இந்தக் கதையும் கதையின் பின்புலமும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என எண்ணினேன் என்று பதில் அளித்தார். 

ஏ.ஆர். ரஹ்மான் கதை எழுதியுள்ளதால் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 

ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 ஸாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

பூவாசம்... அஞ்சனா

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

SCROLL FOR NEXT