முகப்பு
செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்

அடங்காதே படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமியின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:09 PM
பகிர்:

அடங்காதே படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமியின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வானம் கொட்டட்டும், க/பெ. ரணசிங்கம் ஆகிய படங்கள் கடந்த வருடம் வெளிவந்தன. திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக் ஆகிய தமிழ்ப் படங்களில் தற்போது அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் நடித்து இன்னும் வெளிவராமல் உள்ள அடங்காதே படத்தை இயக்கியவர் சண்முகம் முத்துசாமி. இவர் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு போன்றோர் நடிக்கிறார்கள்.
 

முழு கட்டுரையைப் படிக்க →