படம் - youtube.com/iDreamMedia 
செய்திகள்

கரோனாவுக்கு தெலுங்கு நடிகர் பலி

ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

DIN

தெலுங்கு நடிகர் டிஎன்ஆர் கரோனா பாதிப்பால் காலமானார்.

டிஎன்ஆர் என்கிற தும்மல நரசிம்ஹா ரெட்டி பிரபல யூடியூப் தொகுப்பாளராகவும் நடிகராகவும் இருந்தார். ஹிட், போனி, ஜார்ஜ் ரெட்டி, சுப்ரமணியபுரம் போன்ற தெலுங்குப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த டிஎன்ஆர், ஃபிராங்க்ளி வித் டிஎன்ஆர் என்கிற யூடியூப் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரையும் பேட்டியெடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த டிஎன்ஆர், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த டிஎன்ஆர், முதலில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்பிறகு அவருடைய ஆக்சிஜன் அளவுகள் குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டிஎன்ஆரின் மறைவுக்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT