அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழில் வெளியாகும் வொண்டர் வுமன் 1984
கால் காடட் நடித்த வொண்டர் வுமன் 1984 படம் மே 15 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
கால் காடட் நடித்த வொண்டர் வுமன் 1984 படம் மே 15 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
2017-ல் வெளியான வொண்டர் வுமன் படத்தின் அடுத்த பாகமாக வொண்டர் வுமன் 1984 படம் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. பேட்டி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் டயானா பிரின்ஸ் என்கிற வொண்டர் வுமனாக நடித்துள்ளார் கால் காடட்.
கடந்த வருடம் ஜூன் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது வொண்டர் வுமன் 1984 படம். கரோனா பரவல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் அமெரிக்கா, இந்தியா உள்பட சில நாடுகளில் திரையரங்குகளிலும் எச்பிஓ மேக்ஸிலும் வெளியானது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அமேசான் பிரைம் ஓடிடியில் வொண்டர் வுமன் 1984 படம் மே 15 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது.
இரு பாகங்களுக்கு அடுத்ததாக வொண்டர் வுமன் 3 படமும் உருவாக்கப்படும் என வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது.