செய்திகள்

சமந்தாவைப் பாராட்டும் கங்கனா ரணாவத்

சமந்தாவுக்குப் பாராட்டு தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார்.

IANS

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரில் நடித்துள்ள சமந்தாவுக்கு நடிகை கங்கனா ரணாவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 ஜூன் 4 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்த அறிவிப்புடன் தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் இணையத் தொடரில் நடித்துள்ள சமந்தாவுக்குப் பாராட்டு தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார். டிரெய்லரைப் பார்த்த கங்கனா, என்னுடைய மனவலிமை கொண்டவர் என சமந்தாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT