முகப்பு
செய்திகள்

’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் டீசர் கிளிம்ப்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு
பகிர்:

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ஐந்து மொழிகளில் உருவான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் டீசர் கிளிம்ப்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.

1920 -களில் இருந்த அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிற இப்படத்தின் டீசரை இன்று படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை  பெற்று வருகிறது.

இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அடுத்தாண்டு(2022) ஜனவரி 7-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.