முகப்பு
செய்திகள்

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த'வில் இருந்து தங்கம் பாடல் விடியோ வெளியானது !

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இருந்து தங்கம் பாடல் வெளியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் நேற்று(நவம்பர் 4) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 

இந்தப் படத்தில் அண்ணாத்த படத்தில் ரசிகர்கள் வெகுவாக ரசித்த என்னுயிரே பாடல்வரிகளுடனான விடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் தாமரை எழுதிய இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் எழுதியுள்ளார். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் போன்று இந்தப் பாடலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்ணாத்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வருகிற நாட்களிலும் அண்ணாத்த படத்தின் வசூல் குறையாது என்று கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →