செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது இவரா ? : வெளியான தகவல்

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

துவக்கத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. தற்போதைய நிலவரப்படி இந்த வீட்டில் 13 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பாவனி, அபினய் மற்றும் மதுமிதா ஆகியோர் குறைவான வாக்குகள் பெற்றுள்ளதா கூறப்படுகிறது. கடந்த வாரம் மிகவும் பலம் வாய்ந்த போட்டியாளர் என்று கருதப்பட்ட ஸ்ருதி வெளியேறி அதிர்ச்சியளித்தார். 

இந்த நிலையில் இந்த வாரம் மதுமிதா அல்லது அபினய் ஆகிய இருவரில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வுள்ளதாக கூறப்படுகிறது. மதுமிதா ஜெர்மனியை சேர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களிடம் அதிகம் பரீட்சையமில்லாத மதுமிதா தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரனான அபினய் ராமானுஜம் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். துவக்கத்தில் அவர் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. 

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மதுமிதா அல்லது அபினய் ஆகிய இருவருல் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை நடிகர் கமல்ஹாசன் உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT