செய்திகள்

விரைவில் ஓடிடியில் புதிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி: சுவாரசிய தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 5வது சீசனுக்கு ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தற்போது நிகழ்ச்சி மீது ஆர்வம் அதிகரித்திருப்பது ரசிகர்களின் சமூக வலைதள பதிவு சொல்வது புரிந்துகொள்ள முடிகிறது. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஹிந்தியில் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் பங்கேற்பர். 

இந்த நிலையில் தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம். இந்த நிகழ்ச்சியில்  பிக்பாஸ் 1 முதல் 5 வரை கலந்துகொண்ட போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியானது வருகிற ஜனவரிமாதம் இறுதியில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒரு பிரபல நடிகர் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT