முகப்பு
செய்திகள்

நயன்தாராவுக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்த படக்குழு: காரணம் என்ன ?

டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

செய்திகள்

நயன்தாராவுக்கு பதிலாக வேறு நடிகையை ஒப்பந்தம் செய்த படக்குழு: காரணம் என்ன ?

டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பார் என்று கூறப்படுகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:


நடிகர் ரஜினிகாந்த்துடன் நயன்தாரா இணைந்து நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. கலவையான விமர்சனங்களப் பெற்ற இந்தப் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா கண்மனி என்ற வேடத்தில் நடிக்கிறார். 

மேலும் டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கவிருக்கிறார். மேலும், விதார்த் மற்றும் ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கின்றனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்தப் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டதன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது. 

இதன் காரணமாக டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படத்தில் நயன்தாராவால் தேதி ஒதுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இந்தப் படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →