நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு 
செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல்: அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு

நடிகர் விஜய் சேதுபதிக்கு  டிவிட்டரில் மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

நடிகர் விஜய் சேதுபதிக்கு  டிவிட்டரில் மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு நொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என அறிவித்தார். 

அர்ஜூன் சம்பத்தின் இந்தப் பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் வன்முறைத் தூண்டும் வகையில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் சமூக அமைதியை குலைக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் உள்ளதாகக் கூறி இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது கோவை கடைவீதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT