செய்திகள்

நடிகை யாஷிகாவின் உணர்வுபூர்வமான பதிவு: ரசிகர்கள் ஆறுதல்

உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா.

DIN

பிக் பாஸ் தொலைக்காட்சி மூலமாகப் பிரபலமான நடிகை யாஷிகா, சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்றார் யாஷிகா. அப்போது மகாபலிரபும் அருகே யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் யாஷிகாவுக்கு இடுப்பு மற்றும் காலில் உள்ள எலும்புகள் உடைந்தன. விபத்துக்குப் பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா, தற்போது சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் உருக்கமான பதிவொன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் கூறியதாவது:

சிலசமயங்களில் ஒரு தருணத்தின் மதிப்பை நாம் அறியமாட்டோம், அது நினைவு ஆகும்வரை எனக்கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT